சம்பளத்தை உயர்த்தியத்துக்கு இதுதான் காரணம் உண்மையை போட்டு உடைத்த ராஷ்மிகா மந்தனா !!!!

0
194

ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் வெளியான கீதகோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமானார். அந்த படத்தில் இன்கேம் இன்கேம் என்ற பாடலில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இதனால் இவருக்கு அடுத்தது படவாய்ப்புகள் குவிந்தது. தற்போது விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து டியர் கம்ரேட் படத்தில் நடித்துள்ளார். அதுபோக கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார். தளபதி விஜயின் 64 வது படத்திலும் இவர் நடிக்க அதிக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவர் தனது சம்பளத்தை ஒரேடியாக 1 கோடி என உயர்த்தி விட்டார். இது தயாரிப்பாளர்களுக்கிடையே கடும் கோபத்திற்குள்ளாக்கியது. சமீபத்தில் இது குறித்து பேட்டியளித்த இவர் எல்லோருக்கும் சம்பளஉயர்வு, ப்ரோமொஷன் எல்லாத்தையும் எதிர்பார்த்து தானே வேலை செய்கிறாம். அப்படிதான் நானும் சம்பளஉயர்வு கேட்ட்கிறேன் என கூறினார்.