இன்னும் இத்தனை படங்களை கைவசம் வைத்துள்ளாரா ராசி கண்ணா!!

0
141

ராசி கண்ணா தமிழ் திரையுலகில் இமைக்க நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு அந்த அளவுக்கு காட்சிகள் இல்ல விட்டாலும் படம் ஹிட்டானது அவருக்கு படவாய்ப்புகளை குவித்தது. அதனை தொடர்ந்து ஜெயம் ரவியின் அடங்கமாறு, விஷாலின் அயோக்யா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார் இந்த படங்களும் வெற்றி பெற்றதால் இவரின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே போனது.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதுபோக தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து பெயரிடப்படாத படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் வெங்கடேஷ் மற்றும் நகைசைதன்யா நடிக்கும் வெங்கிமாமா படத்திலும் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் சாய் தரம்தேஜ் நடிக்கும் படம் ஒன்றினையும் தன்வசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கக்போகும் 64 வது படத்தில் நாயகியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.