ஆர்வ கோளாறில் ரசிகர்கள் கூட்டத்தில் குதித்த நடிகர்-காயமடைந்த ரசிகர்கள்.

0
278

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்வீர் சிங்க்.ராம் லீலா, பத்மா வதி ஆகிய திரைப்படங்களில் மூலம் பாலிவுட்டில் ரசிகர்களை பெற்றவர்.சமீபத்தில் தனது சக நடிகையான தீபிகா படுகோணை திருமணம் செய்தார்.தற்போது ’கல்லி பாய்’ என்ற திரைப்படத்தில் அலியா பட்யுடன் நடித்துள்ளார்.இப்படம் பிப்-14தேதி வெளிவரவுள்ளது.

இந்நிலையில் ’கல்லி பாய்’ திரைப்படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரன்வீர் சிங்க் தனது பட பாடலை பாடிக்கொண்டே ஆர்வ மிகுதியில் தன்னை ஏந்திக் கொள்ளும்படி ரசிகர்கள் கூட்டத்தில் குதித்துள்ளார்.
இதை எதிர்பாக்காத ரசிகர்கள் அதிரிச்சியடைந்தனர்.இதில் பெண் ரசிகை ஒருவர் உள்பட மேலும் சிலரும் காயமடைந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.