சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் 2 நாள் நடித்துவிட்டு ஓட்டம் பிடித்த நடிகை!

0
297

ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் இரண்டாவது படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், சமந்தா, காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியை ஒரு திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படம் கடந்த 29-ஆம் தேதி வெளியாகி இருந்தது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்க்ளை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் அவர் ஒரு விலைமாதுவாக நடித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிகை நதியா தான் நடிக்க இருந்ததாக நடிகை படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிகை நதியா தான் நடித்து வந்தார்.

அவர் படப்பிடிப்பிற்கு ஒரு சில நாட்கள் கூட வந்து நடித்துக் கொடுத்தார். ஆனால், சில நாட்கள் கழித்து அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

இதனால் நாங்கள் மீண்டும் ரம்யாகிருஷ்ணனை அணுகினோம் அவரும் பெருந்தன்மையாக இந்தப் படத்தில் எந்தவித தடையும் ஏற்படுத்திக் கொடுத்தார் என்று கூறியுள்ளார் இயக்குனர்.