விஜய் டிவி ராமர் கதாநாயகனாக நடிக்கும் முதல் திரைப்படம்!!! விவரம் உள்ளே..

0
33

ராமர் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் சிரிச்சா போச்சு என்ற குழுவில் இருந்து நகைச்சுவை செய்து வந்தார். இருந்தாலும் ஒருமுறை சொல்வதெல்லாம் உண்மை லக்ஷ்மி ராமகிருஷ்ணனை கலாய்த்து பெண் வேடமிட்டு நடித்த அவரின் கதாபாத்திரம் மிகவும் வைரலானது. அதிலும் என்னமா நீங்க எப்படி பண்றீங்களேம்மா என்ற வசனம் மிகவும் பிரபலமானது. இதனால் ராமர் மிகவும் பிரபலமடைந்தார்.

அதன் பின் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே குவிந்தது. இதனால் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் குவிந்தன. பல படங்களில்நகைச்சுவை நடிகராக நடித்தார் ராமர். இந்நிலையில் தற்போது முதல் முறையாக இவர் கதாநாயகனாக நடிக்க உள்ளார். சோல்ஜர்ஸ் ப்ரோடக்சன் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கிறது. அஞ்சலி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபுவும் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இந்த படத்தினை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here