ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது வேதனையளிக்கிறது …!

0
41

விருதுநகர் மாவட்ட செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பெரியாரைப் போன்றவர்கள் இல்லையென்றால் தான் அமைச்சராகி இருக்க முடியாது என்றார். ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை ரஜினி கூறியதில் தவறு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதை பேசுபவர், அவர் பேசியதில் உள்ள நியாயத்தை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என ராஜேந்திர பாலாஜி கூறினார். திமுகவின் முகமூடிதான் தி.க. என்றும், தி.க.வினர் ரஜினியை மிரட்டி பார்க்கிறார்களா என்றும் வினவிய அவர், ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது என்றார்.

ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை, தமிழச்சியை திருமணம் செய்த ஒரு மனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.