சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பயணம் தொடங்குவது இந்த நாளிலா..?

0
31

தமிழக அரசியலில் எப்போதும் பரபரப்பு ஒட்டிக்கொண்டே இருக்கும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகிவிட்டன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. சசிகலா விடுதலை ஆனால், என்ன நடக்கும் என்ற பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை தொடங்கி களத்திற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பும் தொற்றிக்கொண்டுதான் இருக்கிறது.

மக்களிடம் எழுச்சி அலை உருவாகும்போது கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என்று சில மாதங்களுக்கு முன் தெரிவித்த ரஜினிகாந்த், கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.ஆனாலும், ஆதரவாளர்கள் அவரின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது ஊடகங்களில் அசைப்போட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால், அவரிடம் இருந்து எந்த அறிகுறியையும் அறியமுடியவில்லை.