நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான முக்கியமான அப்டேட்..!

0
45

ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் மீண்டும் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக நடிகர் ரஜினிகாந்த் அக்டோபர் 8-ஆம் தேதி சாலை மார்க்கமாக தனது காரில் ஹைதராபாத் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

மற்ற நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அங்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ‘அண்ணாத்த’படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். கொரோனா பிரச்னை முடிந்த இயல்புநிலை திரும்பிய பின்னரே ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியான நிலையில் அதற்கு முன்னதாகவே அவர் கலந்துகொள்ள முடிவு செய்திருக்கிறார்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘அண்ணாத்த’ திரைப்படம் கொரோனா காரணமாக 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று சன் பிக்சர்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.