தனது 2வது கணவருடன் முதன்முறையாக போட்டோ எடுத்து வெளியிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்!!

0
239

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் இரண்டாவது மகள் சௌந்தர்யாவிற்கும் அஸ்வின் என்பவருக்கும் கடந்த பல வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக ரஜினி குடும்பத்தினர் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து பத்திரிக்கை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சௌந்தர்யா தனது இரண்டாவது கணவர் விசாகன் என்பவருடன் தற்போது புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது