நீண்ட இடைவெளிக்கு பின் திரையில் இணையும் ரஜினி-கமல்?இந்த இரண்டு இயக்குனர்களில் யாரோ ஒருவர்…!வெளியான தகவல்

0
75

அரசியலிலும் சரி ,சினிமாவிலும் சரி எப்பொழுதும் பரபரப்பாக பேசப்படும் நபர்கள் என்றாலே ரஜினி,கமல் தான்.இருவரும் சிறந்த நடிகர்கள் என்பதை தாண்டி,மிகசிறந்த நண்பர்கள் என்றே சொல்லலாம்.இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து கட்சி தொடங்குவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில்,தற்பொழுது இருவரும் சேர்ந்து படம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படம் முடிவடைந்ததும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தப் படத்தை இயக்க ராஜமவுலியை அணுகியதாகவும், ஆனால் அவர் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், இயக்குநர் எச்.வினோத், லோகேஷ் கனகராஜ் ஆகியோரில் ஒருவர் இந்தப் படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி ,கமல் இருவரும்,இணைந்து நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து,அதன் படியே நடந்தனர்.ஒரு வேளை இந்த தகவல் உண்மையானால்,ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கே ஒரு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.