“என் வீட்ல கூட மொத்தம் 9 ஓட்டு இருக்கு ஆனால் மொத்தமே எனக்கு 5 ஓட்டு தான் விழுந்திருக்கு” கதறி அழுத வாக்காளர்….

0
324

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் வெளியானது. அதன் படி மீண்டும் மோடியே பிரதமராக பதவியேற்கிறார். இதில் பல வேட்பாளர்கள் குறைவான வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளனர். அதிலும் பஞ்சாப்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்று சாதனை படைத்தாள்ளார்.

நேட்டு சுதர்ன் வாலா என்ற இவர் ஜலந்தர் என்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்த தேர்தல் முடிவைக் கண்டு கதறி அழுதார் அவர். அப்போது அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டியில், ” என் குடும்பத்தில் கூட எனக்கு 9 ஓட்டுகள் இருக்கிறது. ஆனால் அவர்களும் எனக்கு வாக்களிக்கவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது எனக் கூறினார்”. இந்த சம்பவம் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.