நடிகர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி

0
28

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி லேசான அறிகுறியுடனான கொரோனா பாதிப்பு இருந்தது. அதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பில் இருந்து விஜயகாந்த் குணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்று இரவு விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி விஜயகாந்த் வீட்டிலிருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பிரமேலதா விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது.இந்நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.