இளம் இசையமைப்பாளர் காலமானார்… திரைத்துறையினர் இரங்கல்

0
100

இந்தவருடம் ஆரம்பித்தது முதல் பல்வேறு பிரபலங்களின் இறப்பு செய்தி வெளி வந்த வண்ணம் உள்ளது.இந்த நிலையில், தற்போது தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஒருவர் காலமாகியிருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விசிறி. வெற்றி மகாலிங்கம் இயக்கிய இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் நவீன் சங்கர்.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இவர் சாலிகிராமத்தில் மியூசிக் ஸ்டுடியோ வைத்திருந்தார். வீட்டுக்கு ஒரே மகனான நவீன் சங்கர் ஒரு வாரமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே தற்போது இவர் சிகிச்சை பலனின்றி காலமாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் அவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் காலமானார் | popular tamil music director passed away

இதை தொடர்ந்து ரசிகர்களும் திரைத்துறையினர் நவீன் சங்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.