பொன்மகள் வந்தாள் -விமர்சனம்

0
105

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பார்த்திபன், பிரதாப் போத்தன், பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’. இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.நிர்பயா பாலியல் வன்கொடுமை நடந்து 8 வருடங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இன்னும் பல பயங்கரமான குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

முதலில் ஊட்டியில் 10 வயதுக் குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும் காப்பாற்றப் போன இரு இளைஞர்களையும் அவர் சுட்டுக்கொன்றதாகவும் அந்த சைக்கோ கொலைக் குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். பின்னர் திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் தப்பித்துச் செல்ல இருந்த சைக்கோ ஜோதியைப் பிடித்துவிட்டதாகவும், குழந்தையை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டச் சொல்லும்போது, பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால் நாங்களும் பதிலுக்குச் சுட்டதில் குற்றவாளி இறந்துபோனார். அவர் வடநாட்டைச் சேர்ந்த பெண் என்று போலீஸார் செய்தியாளர்கள் முன் தெரிவிக்கின்றனர். இது 2004-ம் ஆண்டில் நடக்கிறது.

Ponmagal Vandhal star Jyotika says business movies portraying ...

இது நடந்து 15 ஆண்டுகள் கழித்து இதில் மறைந்திருக்கும் மர்மம் குறித்து அறிந்துக் கொள்ளும் வகையில் இந்த வழக்கை தூசு தட்டி கையில் எடுக்கிறார் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோதிகா. இதற்கு அவரது அப்பா பெட்டிசன் பெத்துராஜ் (பாக்யராஜ்) ஊக்கமளிக்கிறார். ஒரு கொலைகாரிக்காக வாதடுவதா என ஊர் மக்கள் வெண்பா மீது வெகுண்டெழுகிறார்கள். இந்த அவமானங்களைத் தாண்டி ஏன் இந்த வழக்கைக் கையில் எடுக்கிறார், அதுவும் வழக்கறிஞராக அவர் வாதாடும் முதல் வழக்கு, இதற்கான விடை தான் மீதிக் கதை.

நடிகர்கள் | Latest நடிகர்கள் News, Videos ...

வலி, வேதனை, துயரம், ஆற்றாமை, அழுகை, பதற்றம், உறுதி, துணிச்சல், எதிர்ப்பு, அன்பு என அத்தனை உணர்வுகளையும் அப்படியே திரையில் கொண்டு வந்து அபாரமான நடிப்பால் ஜோதிகா மனதில் நிற்கிறார். ஜோதிகா ஓவர் ஆக்டிங் செய்வார், என்பதை உடைத்தெறிந்துள்ளார். வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

பிரதாப் கே.போத்தன், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் என்று ஐம்பெரும் இயக்குநர்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தன் வழக்கமான குணநலன்களுடன் கூடிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்.

பெண் குழந்தைகளுக்கு ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை சொல்வதைப்போல, ஆண்களிடம் பெண்களை எப்படி பார்க்க வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற மெசேஜ் தற்போதைய காலத்திற்கு முக்கியமானதாக கருதலாம்.