பொல்லாதவன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்..!‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ ட்ரைலர் அவுட்-வீடியோ

0
36

கடந்த 2007-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் பொல்லாதவன். திவ்யா, ஸ்பந்தனா, டேனியல் பாலாஜி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

தமிழில் வெளியான இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ என்ற டைட்டிலுடன் சேகர் சூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தில் நடிகர் கரண் நாத் நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக நாதாலியா கவ்ர் நடித்துள்ளார். வில்லனாக அபிமன்யூ சிங் நடிக்க டேனியல் பாலாஜி கேரக்டரில் கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ளார். இது அவருக்கு முதல் இந்திப்படம். பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிட்டுள்ளார். விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வர உள்ளது.