மாளவிகா புதிய மாஸ்டர் படத்தின் லுக்…!புகைப்படத்தை வைரலாகிய ரசிகர்கள்…

0
467

அட்லி இயக்கத்தில் தீபாவளி தினத்தன்று வெளியான பிகில் படத்தில் நடிகர் விஜய் படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 64 வது திரைப்படமான மாஸ்டரில் தற்பொழுது நடித்து வருகிறார்.இது மாநகரம் மற்றும் கைதி பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் ஆகியோரால் இயக்க உள்ள மாஸ்டர் படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கிறது.

டெல்லி ,சென்னை ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் ,இப்போது கர்நாடகாவின் சிவமோகாவில் படப்பிடிப்பு நடக்கிறது.மேலும் விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடனான காட்சிகள் இந்த இடத்தில் சிறை அமைப்பில் படமாக்கப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டது.

​​மாஸ்டரின் விஜய்யின் இளமையான தோற்றத்துடன் கூடிய புகைப்படம் ஒன்று சமீபத்தில் வைரலாகி, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் , விஜய்யின் மாஸ்டர் படத்தின் பஸ்ட் லுக்கை போலவே அப்படத்தில் நடிக்கும் மாளவிகா ஒரு புகைப்படம் பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இவரின் இந்த புகைப்படம் போல் புதிய பஸ்ட் லுக் வருமோ என சந்தேகமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.மேலும்,இந்த புகைப்படமானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.