பார்த்திபனின் முதல் மகளுக்கு திருமணம்! மாப்பிள்ளை யாருடைய பேரன் தெரியுமா?

0
456

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் இயக்குனர் ,நடிகர் , எழுத்தாளர் என பல்வேறு அம்சங்களைக் கொண்ட ஒரு முக்கிய நபர் ஆவார். அவரும் நடிகை சீதாவும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் கீர்த்தனா மற்றும் அபிநயா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் கீர்த்தனா, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர். தற்போது அவர் இயக்குனர் மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். கீர்த்தனாவிற்கு சென்ற வருடம் திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் தனது முதல் மகள் அபிநயாவிற்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அவரது மாப்பிள்ளையின் பெயர் நரேஷ் கார்த்திக். இவர் பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன் ஆவார். கிட்டத்தட்ட பார்த்திபன் மற்றும் சீதா ஆகியோருக்கு எம்ஆர் ராதாவின் குடும்பம் தூரத்து சொந்தம் தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here