‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை தொடர்ந்து ‘பருத்தி வீரன்’ படமும் ரீ- ரிலீஸ்!!!!!

0
276

2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தல் ஒருவன். கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா மற்றும் ரீமாசென் என பலரும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். சோழர்களைப் பற்றி இந்த திரைப்படத்தில் கூறியிருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் சரியாக ஓடவில்லை. ஆனால் தற்போது ரீ ரிலீஸ் செய்த போது படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான திரைப்படம் ‘ பருத்தி வீரன் ‘. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். எனவே விரைவில் பருத்தி வீரன் ரீ ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.