பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தில் இடம்பெற்ற “பரியேறும் பெருமாள்” திரைப்படம்!!!

0
83

கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்த திரைப்படம் தான் பரியேறும் பெருமாள். மாரி செல்வராஜ் இந்த படத்தினை இயக்கியிருந்தார். கதிர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்தது. இதன் மூலம் பல விருதுகளை வென்ற இந்த திரைப்படமானது தற்போது புதிய விதமாக மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நீங்கள் பார்த்த திரைப்படம் ஒன்றில் உள்ள மெய்ப்பாடுகளை விவரிக்க என இருந்த கேள்விக்கு பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் விளக்கி அதிலுள்ள மெய்ப்பாடுகள் கோனார் தமிழ் உரையின் மூலம் விவரிக்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக மாணவர்களுக்கு பரியறேறும் பெருமாள் திரைப்படம் கொண்டு சேர்ந்தது தான் எங்களது வெற்றி என படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here