கேன்சரால் உயிரிழந்த பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் மகள்…. பிரபலங்கள் இரங்கல்!!!

0
135

தற்போதைய பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி வருபவர் அஷீப் அலி. 27 வயதான இவர் இதுவரை 16 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் மூன்று முறை அரைசதமும் விளாசியுள்ளார். இவருக்கு இரண்டு வயதில் நூர் பாத்திமா என்ற குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அஷீப் அலி இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. நேற்றைய தினம் இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் அவர். அந்த சமயத்தில் அவரது குழந்தை நூர் பாத்திமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனை அறிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அந்த குழந்தைக்கு இரங்கல் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here