கல்வி தொலைக்காட்ச்சிக்கும் கட்டண்ணம் வைக்கும் தமிழக அரசு!

0
123

தமிழகத்தில் உள்ள மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் சென்ற மாதம் 26-ம் தேதி கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.

இந்த சேனல் அரசு கேபிளில் அலைவரிசையில் இலவசமாகக் ஒளிபரப்பாகியது. இந்நிலையில் இந்த கல்வி தொலைக்காட்சி சேனலுக்கு இனி இலவசமாக ஒளிப்பரப்பாமல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கல்வி தொலைக்காட்சியை மேலும் சிறப்பாக நடத்த கூடுதல் நிதி தேவைப்படுவதால் இந்த கல்வி தொலைக்காட்சி சேனலை கட்டண சேனலாக மாற்ற திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.