இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்! கட்டண விவரம் உள்ளே!

0
2645

கடந்த பல வருடங்களாக ஒரே மாதிரியாக இருந்த கேபிள் டிவி சேனல்களின் கட்டணம் தற்போது நடைமுறை மாறி உள்ளது. தற்போது நாம் விரும்பிய சேனல்களை மட்டுமே பார்க்கும் வசதியும் நமக்கு டிராய் விதி முறைகளின் மூலம் கிடைத்து உள்ளது.

இதன் மூலம் விரும்பிய சேனல்களை பார்க்க குறைந்தபட்ச அடிப்படை கட்டணமாக, வரிகள் சேர்த்து 153 ரூபாய் 40 காசுகள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் 100 சேனல்களை பார்க்கலாம். இந்த 100 சேனல்கள் இலவச சேனல்களாகவோ, கட்டண சேனல்களாகவோ இருக்கலாம். எச்டி சேனல்களை தேர்ந்தெடுக்க முடியாது. பொதுத்துறை நிறுவனமான தூர்தர்ஷனின் 25 சேனல்கள் இந்த பட்டியலில் கட்டாயமாக வரும்.

மீதமுள்ள 75 சேனல்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். 100 சேனல்களுக்கு மேல் தேர்வு செய்தால் கூடுதலாக சேவை கட்டணம் வசூலிக்கப்படும். தலா 25 சேனல்களுக்கு 20 ரூபாய் கூடுதல் சேவை கட்டணமாக இருக்கும். தேர்வு செய்யப்படும் சேனல் கட்டண சேனலாக இருந்தால், குறிப்பிட்ட சேனலின் கட்டணமும் இதனுடன் சேர்ந்துவிடும்.