புதிய வாகன சட்டத்திருத்தம்! நாகலாந்து லாரிக்கு 6.5 லட்சம் அபராதம் விதித்த ஒடிசா அரசு!

0
109

புதிய வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பலர் ஆயிரக்கணக்கான ருபாய் மதிப்பில் அபராதம் கட்டி வருவதை பார்த்து வருகின்றோம். சிலருக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதும் செய்திகள் மூலம் தெரியவருகிறது.

தற்போது அதனை மிஞ்சும் வகையில் ஒடிசா மாநில அரசு நாகாலாந்தை சேர்ந்த லாரி உரிமையாளருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சரக்கு வாகனத்தில், ஆட்களை ஏற்றியது, காற்று மாசுபடுத்தியது, ஒலி மாசுபாடு போன்ற  விதிகளை மீறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.