கோவாவில் தன் வருங்கால மாமியாரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய விக்னேஷ் சிவன்..!

0
114

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் கடைசியாக திரையில் தோன்றிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அடுத்து நெற்றிக்கண் இயக்கிய மிலிந்த் ராவ், சிவா இயக்கிய அண்ணாத்தே, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ள நிலையில்,ரிலாக்ஸ் செய்ய கோவாவுக்கு சென்றிருக்கிறார்கள். கோவாவில் நீச்சல் குளம் அருகே நயன்தாரா நடந்து சென்றபோது எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதன் பிறகு நயன்தாரா வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.