தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வித்யாசமான செல்பி எடுத்த நயன்தாரா! புகைப்படம் உள்ளே

0
211

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்பவர் நடிகை நயன்தாரா. இவரும் நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் சிவனும் திரையுலகில் காதல் ஜோடியாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்ச்சர்ஸ் மூலம் முதன் முறையாக தயாரிக்க உள்ள நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாராதான் முன்னணி வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை மிலிந்த் ராவ் இயக்க உள்ளார். இன்றுமுதல் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்காக புதிய கெட்டப்பில் நயன்தாரா நடிக்க உள்ளாராம். இதனால் நேற்று விக்னேஷ் சிவன் எடுத்த செல்ஃபியில் முகத்தை மறைத்து போஸ் கொடுத்துள்ளார்.