தேசிய விருது வென்ற நம்ம கீர்த்திசுரேஷ்…

0
170

தமிழ் திரையுலகிற்கு இது என்ன மாயம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை  கீர்த்தி சுரேஷ். முதல் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அவர் நடித்த இரண்டாவது படமான ரஜினி முருகன் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அதை தொடர்ந்து விஜய்,விக்ரம்,சூர்யா,சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்களுடனும் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு தெலுங்கில் நடித்து வெளியான திரைப்படம் ‘மாகநடி’ திரைப்படத்தில் சாவித்திரியாக நடித்திருந்தார்.


66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கீர்த்தி சுரேஷ் நடித்து  தெலுங்கில் வெளியான ‘மகாநடி’  படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த திரைப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது.