ஒரே நாளில் டபுள் டமாக்க: மகிழ்ச்சியில் ஹைதரபாத் அணியின் தமிழக வீரர் நடராஜன்..!

0
21

2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொண்டன

இதில் டாஸ் வென்ற ஹைட்ரபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது .இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது.

360 டிகிரி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். 43 பந்துகளில் 56 ரன்களை எடுத்திருந்த ஏபிடியை தமிழகத்தை சேர்ந்த நடராஜனின் அற்புதமான யார்க்கரை வீசி க்ளீன் போல்ட் செய்தார்.

அதே நாளில் நடராஜனுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது ஆம் நடராஜனுக்கு மகள் பிறந்துள்ளது . இந்நிலையில் பிறந்த மகளுக்கு பரிசாக இந்த வெற்றியை நடராஜன் சமர்ப்பித்துள்ளார். மேலும் நடராஜனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.