பகலில் தொழிலதிபரை ஓட ஓட சுட்டு கொன்ற மர்ம நபர்..!பதைபதைக்கும் வீடியோ..!

0
86

டெல்லி  காக்ரோல கிராமத்தைச் சேர்ந்த சொத்து வியாபாரி நரேந்தர் (45). நேற்று முன்தினம் துவாரகா பகுதியில் இவர் காரில் இருந்தார்.அப்போது பைக்கை  சற்று தூரத்தில் நிறுத்தி விட்டு. தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு நபர்கள் நரேந்தர் காருக்கு அருகில் வந்துள்ளனர்.

அப்போது நரேந்தர் காரில் இருந்து புறப்பட முயன்ற போது தலைக்கவசம் அணிந்து இருந்தவர்களில் ஒரு நபர் சரமாரியாக நரேந்தரை சுட்டுள்ளார். நரேந்தர் தப்பிக்க முயன்ற போது இன்னொரு கார் மீது ஏறி நின்று அந்த மர்ம நபர் அவரை துப்பாக்கியால்  சுட்டு  விட்டு ஓடிவிட்டார்.