பல விதங்களில் முத்தம் கொடுத்துவிட்டேன்.. ஆனால் இன்னும் ஆசை அடங்கவில்லை.! ராதிகா ஆப்தே ஓப்பன் டாக்!

0
189

நடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.தைரியத்திற்கு பெயர்போனவர் ராதிகா ஆப்தே பாலிவுட், ஹாலிவுட்டில் டாப்லெஸ் காட்சிகளில் நடிக்கிறார். பல்வேறு படங்களில் முத்தக்காட்சிகளில் நடித்திருக்கும் அவருக்கு தீராத ஆசை ஒன்று இருக்கிறதாம்.

இதுபற்றி அவர் கூறியதாவது: எனக்கு 8 வயதாக இருக்கும்போது என் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஒருவன் மீது எனக்கு அதிக ஆசை இருந்தது.

அப்போது எனது வீட்டில் வேலைசெய்யும் பெண்ணுடன் அடிக்கடி சினிமாவுக்கு செல்வேன். நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் காதல் காட்சிகளில் மழையில் நனைந்தபடி காதலிக்கு காதலன் முத்தமிடும் காட்சி வரும்.

அதுபோல் நானும் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்ட பையனுக்கு மழையில் நனைந்தபடி முத்தம் தர விரும்பினேன்.

ஆனால் அதை அவனிடம் சொல்வதற்கான தைரியம் எனக்கு அப்போது இல்லை. இப்போதுவரை மழையில் யாருக்கும் நான் முத்தம் தந்ததில்லை.

அதுதான் எனக்கு நிறைவேறாத ஆசையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த முத்தத்திற்காக காத்திருப்பதாக ராதிகா அப்தே கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here