சிறப்பு பூஜை நடத்திய முருகதாஸ்—தலைவர் படம் நிச்சயம் வெற்றிதான்..புகைப்படம் உள்ளே

0
206

பேட்ட படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாகிறார்.சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் 2.0 படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும் பொங்கலுக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையில், இந்தப் படத்துக்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பழநி முருகன் கோயிலுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here