டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு தேர்வு செய்தது…

0
12

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

2020ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனும், துணை கேப்டனும் மோதுவதால் ஆட்டத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

அந்த அணியில் சௌரப் திவாரி முழு உடற்தகுதியுடன் இல்லாததால் அவருக்குப் பதில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜோஷ் பிலிப்பி, டேல் ஸ்டெயின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதில் ஆடம் ஸாம்பா, இசுரு உடானா, குர்கீரத் மான் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனும், துணை கேப்டனும் எதிர் எதிரே மோதுவதால் ஆட்டத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில் எந்த அணி வெல்லப்போகிறது என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .