மிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம்…

0
511

2016 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடித்த “கடவுள் இருக்கான் குமாரு” படத்தை இயக்கினார் ராஜேஷ்.அதன் பிறகு தற்போது சிவகார்த்திகேயன் வைத்து “மிஸ்டர் லோக்கல்” படத்தை இயக்கியுள்ளார்.இந்த படம் எப்படி என்று பார்ப்போம்.

கதை:

மனோகராக வரும் சிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் விற்னையாளராகவும், கீர்த்தனாவாக வரும் நயன்தாரா டிவி சீரியல் தயாரிப்பாளராகவும் நடித்துள்ளார்.ராதிகா சிவகார்த்திகேயன் அம்மாவாக நடித்துள்ளார்.முதலில் இருவருக்கும் மோதல், பிறகு என்ன அந்த மோதல் காதலாகி கடைசியில் எப்படி இந்த ஜோடி கைக்கோர்கிறது என்பதே மீதிக்கதை.படம் முழுவதும் நயன்தாரா பின்னாடியே சுற்றி டார்ச்சர் செய்கிறார்.மன்னன் பட சாயலில் காதல் காட்சிகள் இருப்பது தெளிவாக தெரிகிறது.மற்றபடி சொல்லும் அளவிற்கு படத்தில் வேறு ஒன்றும் கதை இல்லை.

ப்ளஸ்:

படத்தின் ஒளிப்பதிவு சற்று பாராட்டலாம்.சிவகார்த்திகேயன் சுறு சுறுப்பாக வலம் வருகிறார்.நயன்தாரா காட்சிகள் சற்று ஓகே எனலாம். கை விட்டு எண்ணும் அளவிற்கான ஒரு சில கவுண்டர் டயலாக்ஸ்.

மைனஸ்:

கடந்த அனைத்து படங்களிலும் எப்படி ஹீரோயின் பின்னாடியே சுற்றுவாரோ அதேபோல் தான் இதிலும்,கொஞ்ச நேரத்தில் சலிப்பு தட்டிவிடுகிறது.ரோபோ ஷங்கர்,யோகிபாபு காமெடி ஒன்னு,ரெண்டு இடங்களை தவிர சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை.SMS, ஒரு கல் ஒரு கண்ணாடி காட்சிகளை அப்பட்டமாக புகுத்தியுள்ளனர்.ஹிப்ஹாப் ஆதி என்ன நினைத்தாரோ ஒவ்வொரு படங்களில் இருந்து ஒரு பாட்டை எடுத்து பிளேட்டை மாற்றி கொடுத்து விட்டார்.ராஜேஸ் படம் என்றாலே காமெடி என்று நம்பி போகலாம், ஆனால், இனி ராஜேஸ் படம் போகலாமா என்ற நிலை உருவாகிவிட்டது.டாப் கியரில் சென்ற சிவகார்த்திகேயனுக்கு இது போதாத காலம் போல,கதை தேர்வில் கொஞ்சம் கவனம் தேவை.

சினிமா மேடை மதிப்பீடு: 2/5