மான்ஸ்டர் திரைப்பட விமர்சனம்

0
408

ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இரண்டாவதாக இயக்கியுள்ள படம் மான்ஸ்டர்.கதாநாயகநாக ,எஸ் ஜே சூர்யா,கதாநாயகியாக பிரியா பவானி சங்கர்,நடித்துள்ளார்கள்.

படத்தின் கதை:

அஞ்சனம் அழகிய பிள்ளை எஸ் ஜே சூர்யா வள்ளலார் வழியை பின்பற்றும் ஒரு அஹிம்சைவாதி.இந்த உலகத்தில் வாழும் எந்த உயிரையுமே கொல்லக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்.இவரும், கருணாகரனும் சென்னையில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க வருகின்றனர்.சொந்த விடு இருந்தால் தான் பெண் தருவார்கள் என்பதால் பிரியா பவானி சங்கரை திருமணம் செய்ய சென்னை வேளச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக ஒரு வீடு வாங்குகிறார்.

எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு எலியால் தொல்லை ஆரம்பமாகிறது. எஸ்.ஜே.சூர்யாவின் வீட்டிற்குள் நுழையும் அந்த எலி, அவரை படாதபாடு படுத்துகிறது.இந்த நிலையில், பிரியா ஆசைப்பட்டு கேட்கும் ஷோபா ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறார். அந்த ஷோபாவையும் எலி கடித்து நாசம் செய்ய, கடுப்பாகும் எஸ்.ஜே.சூர்யா அதை கொன்று விட முடிவு செய்கிறார்.கடைசியில், எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற எண்ணத்துடன் வளர்ந்த எஸ்.ஜே.சூர்யா அந்த எலியை கொன்றாரா? பிரியா பவானி சங்கரை கரம் பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மான்ஸ்ட்ரான எலியின் மீதிக்கதை.

படத்தின் மைனஸ்:

படத்தின் மைனஸ் என்று குறிப்பிட்டு எதையும் கூறமுடியாவிட்டாலும் ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் உள்ளன.நான் ஈ பட காட்சிகள் கண் முன் வந்து செல்கின்றன.படத்தின் திரைக்கதை ஒட்டாமல் இருப்பது போல தோன்றுகிறது.

படத்தின் பிளஸ்:

எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் தனது வழக்கமான நடிப்பு இல்லாமல் ஒரு சாதாரண இளைஞராக சிறப்பாக நடித்திருக்கிறார்.அழகு தேவதையாக படம் முழுவதும் ஜொலிக்கிறார் பிரியா பவானி சங்கர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிரிக்கும்படியாக காமெடி செய்திருக்கிறார் கருணாகரன்.எலி சம்மந்தப்பட்ட காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் கிராபிக்ஸ் அதிகம் இல்லாமல், நிஜமான எலியை வைத்து எடுத்திருப்பது. ஒரு எலியை வைத்துக்கூட நல்ல படத்தை தர முடியும் என நிரூபித்திருக்கிறார் நெல்சன்.

ஒரு எலியை மைய கதாபாத்திரமாக வைத்துக்கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையில், வாய்விட்டு சிரிக்கக்கூடிய காமெடியுடன் எடுத்திருக்கும் இயக்குனர் நெல்சன் வெங்கடேசனுக்கு பாராட்டுகள். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. கோகுல் பினேயின் ஒளிப்பதிவில் காட்சிகளும் அபாரம்.

மொத்தத்தில் குழந்தைகளுடன் பார்க்க கூடிய ஒரு படமாக மான்ஸ்டர் அமைந்துள்ளது.

சினிமாமேடை மதிப்பெண்: 3/5