குரங்குக்கு இருக்கும் புத்திசாலித்தனம் ..! மனிதர்களுக்கு இருக்குமா..?அசத்தல் வீடியோ ..!

0
127

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழாயில் இருந்து வீணாகும் நீரை குரங்கு ஒன்று அடக்க முயற்சி செய்து வீடியோ தான் அது.

குழாய் ஒன்றில் இருந்து வெளியேறும் நீரை ஒரு குரங்கு குழாயின் அருகில் சென்று இலைகளைக் கொண்டு அடைக்க  முயற்சி செய்கிறது. ஆனால் தண்ணீரை அடைக்க முடியவில்லை.

இதை நிகாரி என்பவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு  விலங்குகளுக்கு இதுபோன்று புத்திசாலித்தனம் , அறிவும் இருக்கும்போது நம்மைப்போன்ற மனிதர்களுக்கு என்ன நடந்தது என்பது எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை என கூறி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதற்கு பலர் தண்ணீரை சேமிக்க விலங்குகள்  முயற்சி செய்யும்போது மனிதர்களாகிய  நாம் ஏன் தண்ணீரை சேமிக்கக் கூடாது என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். விலங்குகளிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம் என ஏராளமானோர் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.