மாஸ்டர் சிங்கிள் டிராக்:கொண்டாடத்தில் ரசிகர்கள்…வழக்கம் போல இது எந்த பாடலின் காப்பி? தெறிக்கவிட்ட நெட்டிசென்கள்

0
111

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம், கத்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மாஸ்டர் படத்தின் ஒரு குட்டிக் கதை என்று தொடங்கும் முதல் பாடலை அனிருத் இசையில் விஜய் பாடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. குட்டிக்கதை சிங்கிள் டிராக் காதலர் தினமான இன்று வெளியானது. வெளியான சில நிமிடங்கிளல் அதிக பார்வைகள் மற்றும் லைக்ஸ் பெற்று சாதனை படைத்தது. விஜய் ரசிகர்களும் #KuttiStory என்ற ஹேஸ்டேகை இந்திய அளவில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

அதே நேரம் குட்டிக்கதை பாடலை “சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்“ என்ற பாடலுடன் இணைத்து ட்ரோல் செய்தும் வருகின்றனர். தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலையும் ஐயப்பன் பாடலுடன் இணைத்து ட்ரோல் செய்தனர். அதேப் போன்று குட்டிக்கதை பாடலையும் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.