”மாஸ்டர் ” படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஆன்ட்ரியா !

0
195

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம், கத்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட விஜய் – மாளவிகா மோனன் புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. அதில் நடிகர் விஜய்யின் புதிய தோற்றம் இடம் பெற்றிருந்ததைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் புகைப்படத்தைப் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நடிகை ஆன்ட்ரியா, “திறமைவாய்ந்த இயக்குநருடன் பணிபுரிகிறேன். 2020-ம் ஆண்டின் மிகப்பெரிய படத்தை இயக்கும் இயக்குநர். மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் துவங்குகிறது என்று கூறியுள்ளார்.