“வடிவேலு என்னை மன்னிச்சிரு”…30 வருட நட்பை இழக்க விரும்பவில்லை..! உணர்ச்சிவசப்பட்ட மனோபாலா

0
119

பிரபல இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலா தற்போது ஒரு யூடியூப் சேனல் துவங்கி நடத்தி வருகிறார். வேஸ்ட் பேப்பர் என பெயரிடப்பட்டுள்ள அந்த சேனலில் மனோபாலா பல சினிமா துறை நட்சத்திரங்கள் உடன் பேசி அந்த நேர்காணல் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

அந்த வரிசையில் நடிகர் சிங்கமுத்துவை சமீபத்தில் பேட்டி எடுத்திருந்தார் மனோபாலா. அந்த வீடியோவில் வடிவேலு பற்றி சிங்கமுத்து சில விஷயங்கள் பேசி இருந்தார். அதை பார்த்து கோபமான வடிவேலு நேற்று நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.

ஏற்கனவே சிங்கமுத்து – வடிவேலு இடையே நிலம் தொடர்பான பிரச்சனை உள்ள நிலையில், அதன் வழக்கு நடந்து வருகிறது. இந்த சமயத்தில் இப்படி ஒரு சர்ச்சை வெடித்தது தமிழ் சினிமா துறையினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது தொடர்பாக மனோபாலா வடிவேலுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஒரு Youtube சேனலில் அவர் அளித்த பேட்டியில் தனக்கும் வடிவேலுக்கு முப்பது வருடம் நட்பு இருக்கிறது என்றும், அவர் ஏன் என் மீது நேரடியாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ’பதில் கூறியவர் மீது தான் புகார் கூறவேண்டும், கேள்வி கேட்ட என் மீது எதற்கு புகார் கொடுத்தார்?’. வடிவேலுவின் புகார் தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது என்றும், தான் இதுவரை சினிமாத் துறையில் நடுநிலையுடன் தான் செயல்பட்டு வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவரது நட்பை நான் இழக்க விரும்பவில்லை, அதனால் மன்னிப்பு கேட்கிறேன் என மனோபாலா கூறியுள்ளார்.