‘லாபம்’ பட டப்பிங் பணிகளை தொடங்கிய மக்கள் செல்வன்..!வெளியான கலக்கல் அப்டேட்

0
29

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், இடம் பெருள் ஏவல், ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துவருகிறார். டி.இமான் படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.

புல்லட் வாகனத்தில் அமர்ந்த படி கம்பீரமாக நிற்க ஸ்ருதி ஹாசன் அருகில் நிற்கிறார். இன்னொரு புகைப்படத்தில் வித்யாசமான தோற்றத்தில் மிரட்டியிருக்கிறார். இந்த புகைப்படங்களால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் கொரோனா காரணமாக பல பிற படங்களைப் போல லாபம் படமும் Post productions பணிகள் நடைபெறும் தருணத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது அண்மைக்காலமாக படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விஜய் சேதுபதி தன்னுடைய டப்பிங் பணிகளை துவங்கி உள்ளார். மேலும் நடிகர் கலை அவர்களும் தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.