தியேட்டரில் அதிக கட்டணத்தில் டிக்கெட்: மஹேஷ் பாபுவிற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் நோட்டீஸ்!

0
122

மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது வலம் வருகிறார். இந்நிலையில் இவர் முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார். இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றவர். இவர், தெலுங்கில் ‘  ராஜகுமாருடு ‘ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தற்போது நடிகர் தெலங்கானா கொண்டாபூரில் ஏஎம்பி சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை கடந்த டிசம்பரில் திறந்தார் வைத்தார் நடிகர்  மகேஷ்பாபு. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தியேட்டர் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் ஜிஎஸ்டி ஆணையரகம் இவரது தியேட்டரை சோதனை செய்தது. . இந்நிலையில் ஏஎம்பி தியேட்டர் நிர்வாகம் பழைய கட்டணமே வசூலித்த வந்ததுள்ளது . தற்போது இந்த விஷயம்  தெரிய வந்ததை அடுத்து மகேஷ்பாபுவின் ஏஎம்பி தியேட்டரில் அதிக  டிக்கெட் கட்டணம்  வசூலித்ததாக தற்போது  ஜிஎஸ்டி ஆணையரகம் அவருக்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here