மோடி – ஜின்பிங் சந்திப்பில், யார் இந்த தமிழர்…!

0
96

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு சீன அதிபருக்கு சிறப்பக்கலை பற்றி மோடி விளக்கினார். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்நிலையில், நேற்று மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் மத்தியில் கோர்ட் சர்ட் அணிந்து தமிழர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். அவரது பெயர் மதுசூதன் ரவீந்திரன். இவர் இரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.

இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துள்ளார். கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி – ஜின்பிங் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தமிழக மாமல்லபுரம் சந்திப்பிலும் பணியாற்றுகிறார்.