மாஸ்டர் படத்தின் டீஸர்,ட்ரைலர் ரிலீஸ் ஆவது எப்பொழுது ..?வெளியான தகவல்

0
90

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ்க்கு கடந்த ஏப்ரல் மாதமே தயாராக உள்ளது என்பதும் ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களாக இந்த படம் ரிலீசாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து விரைவில் ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர், டிரைலர் ரிலீஸ் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாமல் டீசர், டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளி வர சாத்தியமில்லை என்று கூறினார்.

மேலும் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகிய இரண்டுமே தயாராக இருப்பதாகவும் அவை இரண்டும் வெளிவரும்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.நவம்பர் 16ஆம் தேதி திரையரங்குகள் திறந்த பின்னர் ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி தக்க நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அதன்பின்னர் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் அனிருத் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.