ரஜினி பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்…பிரபல இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்

0
24

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க விரும்புவதாக பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா உள்பட பல வெற்றிப்படங்களை படங்களை இயக்கிய லிங்குசாமி தற்போது ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ரஜினிகாந்த் அவர்களை வைத்து இதுவரை நான் படம் எதுவும் இயக்கவில்லை. ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. ஏனெனில் நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரது ஸ்டைல் நடிப்பு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ரஜினி கேரக்டரில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும். ரஜினி கேரக்டருக்கு தனுஷ் தோற்றம் சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. அதேபோல் ரஜினியின் ஸ்டைலும் தனுஷூக்கு நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று லிங்குசாமி கூறியுள்ளார்.