லிங்குசாமியின் அடுத்த படத்தில் பிரபல இளம் ஹீரோயின்..?

0
20

ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் லிங்குசாமி முதன்முறையாக ஒரு தமிழ் – தெலுங்கு இருமொழி திரைப்படத்தை இயக்கத் தயாராகி வருவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திரைப்படம் சீனிவாசா சித்தூரி தயாரித்துள்ளது, மேலும் டோலிவுட் நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கவுள்ளார், இது கோலிவுட்டில் அறிமுகமாகும் முதல் திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், இந்த படத்தில் இளம் கதாநாயகி கிருத்தி ஷெட்டி ஹீரோயினாக இடம்பெறக்கூடும் எனவும் , விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. கிருத்தி ஷெட்டி சமீபத்தில் விஜய் சேதுபதி தனது தந்தையாக நடித்திருந்த சூப்பர்ஹிட் திரைப்படமான உப்பேனாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.