பிக்பாஸ் வீட்டில் நுழையும் பிகில் நடிகை..?குழப்பத்தில் ரசிகர்கள்

0
67

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. நிகழ்ச்சி துவங்கும் நாள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் இவர்கள் தான் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று கூறி சிலரின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.விஜய்யின் பிகில் படத்தில் தென்றலாக நடித்த அம்ரிதா ஐயர் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக பேச்சு கிளம்பியது. இது குறித்து அறிந்த அம்ரிதா, ஏன் சிலர் என் பெயரை பிக் பாஸ் பட்டியலில் சேர்க்கிறார்கள் என்று கேட்டார்.

இந்நிலையில் அம்ரிதா சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பொழுது ஒருவர், நீங்க பிக் பாஸ் வீட்டிற்கு போகிறீர்களா என்று கேட்டார். அதற்கு அம்ரிதாவோ, தெரியல, சஸ்பென்சாவே இருக்கட்டும் என்று கூறி சிரித்தார். அம்ரிதாவின் பதிலை பார்த்தவர்கள், அவர் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டிற்கு போகிறார் என்று முடிவு செய்துவிட்டனர்.

டிக்டாக் புகழ் இலக்கியா, பகல் நிலவு தொடர் புகழ் ஷிவானி, விஜே மணிமேகலை, புகழ் ஆகியோர் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ பட்டியில் வெளியாகும் வரை இது போன்று யார் பெயராவது அடிபட்டுக் கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.