திருமணத்திற்கு தயாரான லட்சுமி மேனன்!

0
92

22 வயதாகும் லட்சுமி மேனனுக்கு கால்யாணம் நடைபெற உள்ளது. அதற்காக அவர்களின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தமிழ் சினிமா ரசிகர்களை ஒரே படம் மூலம், வெகுவாக கவர்ந்த ஒரே நடிகை, லட்சுமி மேனன். இவர், கும்கி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தில் அவர் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். மேலும் அப்படம், அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அதன்பின், இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரபாண்டியன் என்ற படத்தில் நடித்தார். அந்தப்படம் மூலம் சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த அறிமுக ஹீரோயினாக லட்சுமி மேனன் விருது பெற்றார். 

இந்நிலையில், 22 வயதாகும் லட்சுமி மேனன் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் பணியில் அவரது குடும்பத்தினர் மிகத் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.