‘காஞ்சனா 3’ வெற்றியை ரஜினிகாந்துடன் கொண்டாடிய லாரன்ஸ்,வேதிகா…

0
206

லாரன்ஸ் நடித்து, இயக்கி, தயாரித்து வெளியாகியுள்ள படம் ‘காஞ்சனா 3’.முனி பட வரிசையில் மூன்றாவது படமாக இது வெளியாகியுள்ளது.ஏப்ரல் 19-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.காஞ்சனா 3′ மக்களிடையே வெற்றி பெற்றிருப்பதால், மும்பையில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

மும்பையில் நடைபெற்று வரும் ‘தர்பார்’ படப்பிடிப்புக்கு இடையே, ரஜினி – லாரன்ஸ் சந்திப்பு நடைபெற்றது. வேதிகாவுடன் லாரன்ஸ் உடன் சென்று ரஜினியிடம் வாழ்த்து பெற்றிருக்கிறார். தற்போது லாரன்ஸும் மும்பையில் ‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கான ‘லட்சுமி பாம்’ படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.