‘ராட்சஸன்’ இயக்குனர் ராம்குமார்-தனுஷ் நடிக்கும் படம் குறித்து வெளியான அப்டேட்…

0
300

தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகிவரும் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக அவர் ‘ராட்சஸன்’ இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் ஒரு பேன்டஸி ஆக்சன் அட்வென்ச்சர் திரைப்படமாக உருவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்காக இயக்குனர் ராம்குமார் ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கும் வகையில் பல்வேறு தகவல்களை திரட்டி வருகிறார்.

மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.