துப்பாக்கியால் சுடுபவனும் குடிமகன்தான்,சுடப்பட்டு வீழ்பவனும் குடிமகன்தான்’..!லாபம் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

0
175

தமிழில் வெளியான , ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் ஆர்யா, விஜய் சேதுபதியை வைத்து புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தை அடுத்து லாபம் படத்தில் மீண்டும் எஸ்.பி.ஜனநாதன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி இணைந்துள்ளது.

இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் சாய் தன்ஷிகா, டேனியல் பாலாஜி, கலையரசன், ஜெகபதி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். 7சிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் விஜய் சேதுபதி இணைந்து தயாரிக்கும் லாபம் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதில் கையில் மைக், தோலில் ஒலிபெருக்கியுடன் சமூக அவலங்களுக்காக போராடும் சமூக ஆர்வலராக தோன்றியுள்ளார் விஜய் சேதுபதி.

இந்நிலையில், போஸ்டர் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் ஜனநாதன், உலகம் முழுவதும் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக மக்கள் போராடி வந்திருக்கிறார்கள். துப்பாக்கியால் சுடப்பட்டு செத்துதான் இந்தப் பலனை நாம் அனுபவத்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் இந்த சிலைகள் உணர்த்துகின்றன. ‘குடிமக்களே’ என்ற வாசகம், ‘துப்பாக்கியால் சுடுபவனும் குடிமகன்தான். சுடப்பட்டு வீழ்பவனும் குடிமகன்தான்’ என்பதைச் சொல்கின்றன” என்றார்.