நாளைய போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் களத்தில் ஆதிக்கம் செலுத்துவாரா?…

0
33

2020 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பிடித்து இருக்கும் (41 வயது) அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் இதுவரை எந்த போட்டியிலும் களம் இறங்கவில்லை.

கடந்த வாரம் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் விளையாடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘புட் பாய்சன்’ பிரச்சினை காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் அவரால் விளையாட முடியாமல் போனது. தற்போது குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுவார் என்று பஞ்சாப் அணி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை பஞ்சாப் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் அவர்களால் போட்டிகளில் வெற்றி காண முடியவில்லை கேப்டன் ராகுல் மற்றும் மயங்அகர்வால் நல்ல போர்மில் இருந்தாலும் அந்த அணியில் அவர்களு அடுத்து மிடில் ஓவரில் அணியை எடுத்து செல்ல எந்த வீரரும் இல்லாதலால் சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகிறது