கேப்டனாகும் மும்பை இந்தியன்சின் வெற்றி வீரர்! மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் குஷி

0
128

மேற்கு இந்திய தீவுகள் அணியின் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக கேரன் பொல்லார்ட்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு இந்திய தீவுகள் அணியை பொருத்தவரை டெஸ்ட்  மற்றும் ஒருநாள் போட்டிக்கு ஜேசன் ஹோல்டர் கேப்டனாக இருந்து வருகிறார் .டி-20 போட்டிகளுக்கு கார்லஸ் பிராத்வெய்ட் இருந்து வருகின்றனர். உலக கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.அந்த இந்தியாவிற்கு எதிரான தொடரிலும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை.

இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அணி நிர்வாகம் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அதாவது டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக அனுபவ வீரரும்,ஆல் -ரவுண்டருமான கேரன் பொல்லார்ட்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.